Blog-ஐ சமூக தளங்கள் மூலம் பிரபலப்படுத்துவது எப்படி - பகுதி 3

முகமறியாத நபர்களை நண்பர்களாக இணைக்கும் சக்தி கொண்டது சமூக வலைத்தளங்கள் மட்டுமே. கடந்த ஐந்து ஆண்டுகளில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அளவிட முடியாத வகையில் வளர்ந்து நிற்கிறது. சரி விசயத்திற்கு வருவோம். வலைபூவிற்கு இந்த சமூக வலைத்தளங்கள் பெரிதும் உதவியாக இருக்கிறது. ஏன் இந்த வலைத்தளங்கள் பல இயங்கிக் கொண்டிருப்பதற்கு காரணமே சமூக வலைத்தளங்கள் தான். 

சமூக வலைத்தளங்களில் பிரபலமானது ட்விட்டர் மற்றும் முகநூல் இவை இரண்டும் வலைதள உலகில் பலம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.  இவை குறித்து பார்ப்போம்

ட்விட்டர் மற்றும் முகநூல்:
பிரபலங்கள் முதல் பாமரன் வரை பயன்படுத்த எதுவாக வடிவமைக்கப் பட்டவை தான் ட்விட்டர் மற்றும் முகநூல். இதில் இலவசமாக கணக்கு துவங்கி அதுவும் உமது வலைப்பூ பெயரில் துவங்கினால் நல்ல பலனைத் தரும். முகநூலின் இதற்கான பிரத்தியேக பக்கங்களை உருவாக்கிக் கொள்ளலாம். உமது வலைப்பூவில் உமது முகநூல் பக்க மற்றும் ட்விட்டர் இணைய முகவரி குறித்த அறிவிப்பு அதனோடு கூடிய லிங்க் தரவும். உமது தளத்திற்கு வரும் வாசகர்கள் உமது பதிவுகள் பிடித்திருப்பின் இதில் இணைந்து கொள்வர். 

இதன் மூலமாக கணிசமான பார்வையாளர்களை கவர முடியும்.

பக்கங்களை துவங்குவது பெரிய விஷயம் அல்ல அவ்வப்போது அப்டேட் செய்தால் மட்டுமே நிறைய நபர்களை கவர்ந்திழுக்க முடியும். 

2 comments:

  1. பகிர்வுக்கு நன்றி சார்...

    ReplyDelete
  2. பயனுள்ள பகிர்வு நன்றி

    ReplyDelete